அன்னை நாகம்மையார்
அன்பும், அடக்கமும், அஞ்சாமையும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னையார் ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள்.
இவருடைய வாழ்க்கைச் சரிதம் பெண்மக்களுக்குப் பெரும் படிப்பினையை ஊட்டக்கூடியது; ஆண்மக்களுக்கும் அவ்வாறே சாதாரண வாழ்க்கையையுடைய நடுத்தரக் குடி. ஈ.வெ.ரா.வின் அன்னையாருக்கு உறவினர்.
அன்னை நாகம்மையார் சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண் மணி செல்வச் செழுமையில் திளைத்த ஈ.வெ. ராமசாமி அவர்களை கைப்பிடித்தார். அந்தக் கால கட்டத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பிடிவாதமாக இருந்து திருமணம் செய்து கொள்வது என்பது சாதார ணமானதல்ல.
வைதிகப் பழக்க வழக் கத்தில் வளர்ந்த இந்தப் பெண் சுட்டெரிக்கும் பகுத்தறிவுச் சூரியனின் வெப்பத்தைத் எதிர் கொள்வதில் மூச்சுத் திணறியவர்தான்.
பெரியாரிடமா நடக்கும்? தம் வழிக்குக் கொண்டுவர பல உபாயங்களை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.
நான் மட்டும்தான் பகுத் தறிவுவாதி - வீட்டில் அப்படி இல்லை என்று சொல்பவர் களுக்கு இது ஒரு பாடம்! குடும்பத்தைத் திருத்தாத நீயா குவலயத்தைத் திருத்தப் போகிறாய்? என்ற கேள்வியை அனாவசியமான தாகக் கருத முடியாதே!
எந்த அளவுக்கு அம்மை யார் தயாரிக்கப்பட்டார்? கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு -காங்கிரஸ் தலைவர் காந்தியாரின் கவனத்தையும், கருத்தையும் கவரும் அளவுக்குத் திற மையை வெளிப்படுத்தியவர்.
வைதிகப் பழக்க வழக் கத்தில் வளர்ந்த இந்தப் பெண் சுட்டெரிக்கும் பகுத்தறிவுச் சூரியனின் வெப்பத்தைத் எதிர் கொள்வதில் மூச்சுத் திணறியவர்தான்.
பெரியாரிடமா நடக்கும்? தம் வழிக்குக் கொண்டுவர பல உபாயங்களை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.
நான் மட்டும்தான் பகுத் தறிவுவாதி - வீட்டில் அப்படி இல்லை என்று சொல்பவர் களுக்கு இது ஒரு பாடம்! குடும்பத்தைத் திருத்தாத நீயா குவலயத்தைத் திருத்தப் போகிறாய்? என்ற கேள்வியை அனாவசியமான தாகக் கருத முடியாதே!
எந்த அளவுக்கு அம்மை யார் தயாரிக்கப்பட்டார்? கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு -காங்கிரஸ் தலைவர் காந்தியாரின் கவனத்தையும், கருத்தையும் கவரும் அளவுக்குத் திற மையை வெளிப்படுத்தியவர்.
அரசியல் வாழ்வு
பின்னாளில் ஈ.வெ.ரா.சொந்த வாழ்வைத்துறந்து பொதுநல வாழ்வில் ஈடுபட்டார். அன்னையாரும் கூடவே அச்சேவையில் இறங்கினார். ஈ.வெ.ரா. பொதுநல வாழ்வில் சிறப்படைந்ததற்கு காரணம் அன்னையாரே. அன்னையாரின் பூரண உதவியின்றேல், ஒத்துழைப்பின்றேல் ஈ.வெ.ரா. சிறப்படைந்திருக்க முடியாது; இது மறுக்கமுடியாத உண்மை.
1920 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அன்னையார் எல்லாக் காங்கிரஸ்களுக்கும், அரசியல் மகாநாடுகளுக்கும் கணவருடன் தவறாமல் போய் வருவதுண்டு. அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினராயிருந்திருக்கிறார்.
1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. ஈ.வெ.ரா.வும் அதில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடை உடுத்தினார். நாம் தேசத்தின் ஏழை மக்களின் நன்மைக்கு உழைக்கின்றோம். ஆதலால் நாமும் எளியார் போலவே ஆடையணிகள் பூணவேண்டும் என்னும் கருத்தையே மேற்கொண்டார். அஞ்சாமல் வெளிவந்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார். ஒத்துழையாமை இயக்கம் வலுவடைந்தது. அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பலத்த போராட்டம் இச்சமயத்தில் அன்னையார் முன்னணியில் நின்று போராடினார். இது தமிழ்நாட்டில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. இதனால் அனேக பெண் மக்களும் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர்.
1921 ஆம் ஆண்டில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் வெகு மும்முரமாக நடைபெற்றது. அரசாங்கத்தாரால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஈ.வெ.ரா.வும் அவர் தொண்டர்களும் தடையை மீறினர்; கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் ஈ.வெ.ராவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளுடன் புறப்பட்டார். அரசாங்கத்தின் தடையுத்தரவை மீறினார். ஈரோட்டில் பெருங்கொந்தளிப்பு. தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி. அரசாங்கத்துக்குப் பெருந்திகைப்பு. உடனே தடையுத்தரவை நீக்கினர் அரசாங்கத்தார். அன்னையாரையும் அவர் தோழர்களையும் கைது செய்யாமல் விட்டனர். கைது செய்திருந்தால் ஈரோட்டின் நிலைமை எப்படியாகி இருக்கும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.
அச்சமயம், மறியல் சம்பந்தமாக அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தப் பேச்சு நடந்தது. சர். சங்கரநாயர் தலைமையில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இதற்கு மாளவியா மகாநாடு என்று பெயர், இம்மகாநாட்டில் திரு. காந்தியார், முக்கியமாக ஈரோட்டு மறியலையே குறிப்பிட்டார். ஈ.வெ.ரா. நாகம்மாளின் அபிப்பிராயம் தெரிந்தே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஒத்துழையாமை இயக்கம் மறைந்தது. 1924 ஆம் ஆண்டில் வைக்கம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஈ.வெ.ரா. ஈடுபட்டார். நாகம்மையாரும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டிலிருந்து பல பெண்களையும் வைக்கத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போராட்டத்தில் கேரளப் பெண்களும் உற்சாகத்துடன் சேரும்படி செய்தார். தமது கணவர் கைதியான பிறகும், காங்கிரசின் உதவி கிடைப்பதற்கு முன்பும் தனித்து நின்று அப்போராட்டத்தை அஞ்சாமல் நடத்தினார். வைக்கத்தில் தமது வெற்றிக் கொடியைப் பல மாதங்கள் பறக்கும்படி செய்தார். அவர் சேனாதிபதியாக இருந்து வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற காட்சி சமூக ஊழியர்களைத் தட்டியெழுப்பியது. கொடிய சூரிய வெப்பத்திற்கும், பெருத்த மழைக்கும் பின் வாங்காமல் கோவில் வாசற்படி முன்பு அவர் நின்று சத்தியாக்கிரகம் செய்த காட்சி எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது; அப்போரில் ஈடுபடும்படி செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சியை அதிகமாகக் கிளப்பி விட்டது. வைதீகர்களின் மனத்திலும் பெருந்திகிலை உண்டாக்கிற்று.
இதுவரை உலகில் நடந்த சத்தியாக்கிரகங்களில் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடியது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இவ்வெற்றிக்குக் காரணம் நமது அன்னையாரே.
"வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகைமாலையும் சூடினார்'' என்று திரு.வி.க. முதலியார் அவர்கள் கூறியிருப்பது உண்மை! உண்மை!! உண்மை!!!
அய்ரோப்பிய நாடுகளுக்கு அவரது துணைவர் பெரியார் சுற்றுப் பயணம் செய்தபோது இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் நிருவகிக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.
தம் துணைவரோடு சிங்கப்பூர் சென்று திரும்பிய காலை அன்பின் மிகுதியால் தங்களுக்குப் பரிசு பொருள் என்ன வேண்டும் என்று அம்மக்கள் கேட்ட பொழுது நீங்கள் எல்லாம் இங்கு சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பி வருகிறீர்களே அந்த அன்பு போதும்! என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்னும் நிலையை அடையும் அள வுக்கு பிரபலமானார். சுய மரியாதைத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு முன் னேறினார்.
வீட்டுக்கு வருவோரை வரவேற்று விருந்தோம்புவ தில் அவர் ஒரு தாய். எந்த நேரத்தில் சென்றாலும் சூடாக எப்படி அந்த சுவை யான தோசை கிடைக் கிறதோ என்று ஆச்சாரியார் ஆயாசப்படும் அளவுக்குச் சிறந்தவர்.
நாகம்மாள் மறைவு
எல்லாம் நன்மைக்கே எனதருமைத் துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.05.1933-ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப் படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷ காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விசயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடத்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண்ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றில் ஒன்றுக்கு பத்தாக நடத்துக்கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன். நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொது நல சேவையில் ஈடுபட்டபிறகு பொதுநல காரியங்களுக்கும் சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத் திலும், சு.ம.இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட் டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!
எது எப்படி இருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஒர் அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை யெய்தினாள். இதிலொன்றும் அதிசயம் இல்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய 23ஙூ இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழ வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டு மென்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.
எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழித்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்தி கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ, எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்தி கொள்ளமாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்து கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும் நாகம்மாள் எனக்குமுன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்யமுடியாத நஷ்டமென்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் அல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால் அவர்களும் என்னைப்போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருமென்று கருதியது.
மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின், ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்பகாரணங்களே அவ்வம்மைக்கு கூற்றாக நின்றது. என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்படயிருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருஷகளுக்கு முன்பு இருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சாரியார் போல) - (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடன் அல்ல) - (பண வசூலுக்காக அல்ல) - சஞ்சாரத்திலேயே சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டுமென்றும் நமக்கென்றும் ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் இதற்கு வேறு எவ்வித தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாக இருந்தாள். இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையை தருவதாகுக.
குடிஅரசு - தலையங்கம் - 14.05.1933
நாகம்மாள் தகனம்
தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11-ந் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள். உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப்பட்டு நன்கு அலங்கரித்து ஈ.வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (ஈ.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள். அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடைஇடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.
மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங்களாலும், அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள். வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன. தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து
கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சிசுந்தரம் பி.ஏ., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. ஈ.வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டார்.
குடி அரசு - 14.05.1933
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக